தலை மன்னார் காட்டு பகுதியில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்
தலை மன்னார் ஊர் மனை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகள் மீட்கப் பட்டுள்ளன.
மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து தலைமன்னார் பகுதியில் நேற்று (29) நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
18 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 85 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

ஆனையிறவு என்பது தமிழ் மக்களின் ஆன்மாவுடன் இரண்டறக் கலந்துவிட்ட பெயர் - பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!
மேலதிக விசாரணை
அத்தோடு, இந்த போதைப்பொருள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்ட போதைப் பொருள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
