கிளிநொச்சியில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
கிளிநொச்சி- புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி ரவைகள் இன்றைய தினம்(7) கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை அதிகளவான துப்பாக்கி ரவைகள் சிதறி காணப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அங்கு சென்றிருந்த பொலிசார், இராணுவம் சிதறி காணப்பட்ட ரவைகளை மீட்டுச் சென்றுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








