இலங்கையிலிருந்து கிறீன் கார்ட்டுக்காக இம்முறை பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பம்
அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும் கிறீன் கார்ட் திட்டத்திற்காக இம்முறை இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கூடுதல் அளவில் கிறீன் கார்ட் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தனர் என கொழும்பு மாவட்ட தொழில்சார் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கிறீன் கார்ட் லொத்தர் சீட்டிலுப்பிற்காக நூற்றுக்கு ஐநூறு வீதம் அதிகமானவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர் என சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிலும் கிறீன் கார்ட் லொத்தர் சீட்டிலுப்பு மூலம் உலக அளவில் 55,000 பேருக்கு அமெரிக்காவில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கிறீன் கார்ட்டுக்காக விண்ணப்பம் செய்வதற்காக கால அவகாசம் கடந்த ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி முதல் இந்த மாதம் 9ம் திகதி வரையில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
