யாழில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள்!
யாழ். அச்சுவேலி - நாவற்காடு பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் மரணச் சடங்கில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஆகியவற்றை மீறி பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அச்சுவேலி நாவற்காடு பகுதியைச் சேர்ந்த தியாகராசா மதனபாலன் (வயது 40) என்பவர் உழவு இயந்திரத்தின் மூலம் உறவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 2ம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது. அல்வாயில் சடலம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சடலமானது அச்சுவேலிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதன்போது அவர் செலுத்திய இப.போ.ச பேருந்தும் இந்த ஊர்வலத்தில் சென்றது.
இந்த ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் சென்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.








அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
