லண்டனில் தொடர்மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து! - தீயணைப்பு வீரர்கள் குவிப்பு
கிழக்கு லண்டனில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிட தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Whitechapel High Street, in Aldgate East பகுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டிடத்தின் 17வது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜன்னல்களை மூடிக்கொண்டு மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் உள்ள சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
We're dealing with this fire on #WhiteChapel High Street. Ten fire engines & 70 firefighters are at the scene. Please avoid the area if possible. https://t.co/KM59RSlaK4
— London Fire Brigade (@LondonFire) March 7, 2022





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
