பிரான்ஸில் தமிழ் வர்த்தக நிலையத்திலிருந்து பெருந்தொகை தங்கம் மீட்பு
பிரான்ஸில் தமிழர் வர்த்தகர் ஒருவரின் கடையொன்றில் பெருந்தொகை தங்கம், பணம் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இரகசிய அறை ஒன்றுக்குள் இருந்து நேற்று முன்தினம் கிலோ கணக்கில் தங்கம் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு புகைப்பட கலையகம் ஒன்றின் பின் அறையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே அவர்கள் குறித்த கலையகத்தினை அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது தங்க ஆபரணங்கள், அதிக விலை கொண்ட இரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் €100.000 யூரோவுக்கும் அதிகமான ரொக்கப்பணம் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களின் உரிமையாளர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதான இந்தியத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan