தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு கடற்றொழிலாளர் சமூகம் கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற்சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் என்ற பயணத்தில் தொடர்ந்து பயணித்தால் தான் தமிழரினுடைய இருப்பையாவது நாங்கள் உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென்னிலங்கையை சேர்ந்த எந்தவொரு வேட்பாளரும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரவோ தமிழ் மக்களை ஆதரிக்கவோ போவதில்லை.
அதேவேளை, தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் தான் கடல்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன என்றும் யாழில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |