லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்க எதிர்பார்ப்பு
லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது கிரிக்கெட் போட்டிகளின் பதிப்பு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி ஒகஸ்ட் 1 முதல் 21 வரை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் நடப்பு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதனை ஒத்திவைக்க பரிசீலித்து வருகிறது.
காலி அணியின் வலியுறுத்தல்
ஐந்து அணிகளில் ஒன்றான கோல் க்லாடிட்டர்ஸ் திட்டமிட்டபடி போட்டி நடத்தப்பட்டால், போட்டியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அணி வலியுறுத்தியுள்ளது.
போட்டியானது மொத்தம் 24 போட்டிகள் என்ற அடிப்படையில், 20 முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் நான்கு இறுதி சுற்று ஆட்டங்கள், இறுதி போட்டி என நடத்தப்படவுள்ளது.
போட்டிக்கான முன்னைய திட்டங்கள்
முதல் 14 ஆட்டங்கள் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். பின்னர், ஏனைய போட்டிகள் ஒகஸ்ட் 13 முதல் ஹம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும் என திட்டமிடப்பட்டிருந்தன.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் இரண்டு பதிப்புகளையும் யாழ்ப்பாண அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

இலங்கை தொழிலதிபரின் மனைவி ரம்பா கொடுத்த சர்ப்ரைஸ்! கணவர் இறப்பிற்கு பிறகு சிரித்த முகத்துடன் மீனா Manithan

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம்- யாரை சந்தித்து எடுத்துள்ளார் பாருங்க Cineulagam

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
