எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் - சற்றுமுன் அறிவிப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02.05.2026) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.
இந்த நிலையில், லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 392 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 410 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் இருக்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் தாங்களும் தங்கள் விலைகளைத் திருத்தியமைக்கப் போவதாக சினோபெக்கும் அறிவித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகள்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதன் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 410 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 470 ரூபாயாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 392 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபா 458 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 265 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு: கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்