சீன விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் கலந்தாலோசிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
சீன விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் அடிக்கடி கலந்தாலோசிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனத் திட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்தாலோசிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானதல்ல எனவும், இலங்கைக்கு சொந்தமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக அதிகார சபையினால் நிர்வாகம் செய்ய முடியாத காரணத்தினால் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான், அமெரிக்க கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும், துறைமுகத்திற்கு இராணுவ பெறுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.
சூம் தொழில்நுட்பம் வழியாக ஹாவார்ட் பல்கலைக்கழகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.