ரஷ்யாவுக்கு எதிரான தடைகளால் நேரடியாக பாதிக்கப்படும் இலங்கை
உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா எடுத்த முடிவை காரணமாக கொண்டு, அந்நாட்டுக்கு எதிராக தடைகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனடிப்படையில், வங்கி, எரிசக்தி, விமானம், தொழிற்நுட்பம் ஆகிய பல முக்கிய துறைகளுக்கு எதிராக தடைகளை விதிக்க பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் ரஷ்யாவின் பொருளாதார பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள தடைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என உக்ரைன் உட்பட ஏனைய நாடுகள் கூறியுள்ளன.
அதேவேளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள தடைகள் காரணமாக இலங்கை நேரடியாக பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடான ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல், வாங்கல்களுக்கு இது நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக தேயிலையை ஏற்றுமதி செய்யும் போது, அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இததைன தவிர்க்க இலங்கை ரஷ்ய வங்கிகளுடன் தனியாக கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டால், அது ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தொடர்பில் எதிர்மறையான பிரதிபலிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்னர்.
இதனை தவிர அண்மைய காலத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து வந்துள்ளனர். 30 வீதமான சுற்றுலாப் பயணிகள் இந்நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலைமையாக மாறியுள்ளது எனவும் அந்த ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
You My Like This Video