ஜப்பானியர்களை ஏமாற்றி மோசடி செய்ததாக இலங்கை நிறுவனம் மீது குற்றச்சாட்டு
ஜப்பானில் அந்நாட்டுப் பிரஜைகளை பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை நிறுவனமொன்று மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற போர்வையில் இந்த நிறுவனம் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் மொழியை சரளமாக பேசக்கூடிய உள்ளுர் பிரஜைகளின் உதவியைக் கொண்டு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாரியளவு பண மோசடிகள்
சில ஜப்பானியர்கள் சுமார் 30 இலட்சம் யென்கள் வரையில் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தென் ஆசிய நாடுகளிலிருந்து ஜப்பானிய மக்களை இணைய வழியில் ஏமாற்றி பணம் பறிக்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் பதிவாகி வருகின்றது.
ஜப்பானியர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, முதலீடுகள் தொடர்பில் ஜப்பானியர்களை தூண்டி பாரியளவு பண மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |