கூகுள் கூகுள் மொழி பெயர்ப்பு தளத்தில் மேலும் 24 மொழிகள்
கூகுள் நிறுவனம் தனது ( Google Translate இணைய பக்கத்திற்கு மேலும் 24 மொழிகளை சேர்த்துள்ளது.
இதனடிப்படையில் உலகம் முழுவதும் அந்த மொழிகளை பேசும் சுமார் 300 மில்லியன் மக்களுக்கு மொழி தடைகளை வெற்றி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழிகளில் 10 மொழிகள் ஆபிரிக்க கண்டத்தில் பேசப்படும் மொழிகள். Lingala, Twi Tigrinya உள்ளிட்ட மொழிகள் அதில் அடங்குகின்றன.
இதனை தவிர இந்தியா, நேபாளம், பிஜி தீவு போன்ற நாடுகளில் வாழும் 50 மில்லியன் மக்கள் பேசும் பேஜ்புரி, மாலைத்தீவின் திவேஹி ஆகிய மொழிகளும் கூகுள் மொழிப்பெயர்ப்பு தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மொழிகளுடன் கூகுகள் Google Translate தளத்தில் மொழிப்பெயர்க்கக் கூடிய மொழிகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்தள்ளது.