மண்ரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக மண்ரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்ரிவுக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனமழையால் மண் சரிவுகள் மற்றும் நில அசைவுகளின் அபாயம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு
அதன்படி, மழைநீர் விரைவாக வெளியேறுவதற்கு ஏதுவாக வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளைச் சுத்தம் செய்யவும், வீட்டின் மேலுள்ள கனமான மரங்களையும் அபாயகரமான பொருட்களையும் முடிந்தவரை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்குப் பின்னால் உள்ள உயர்த்தப்பட்ட மண் வரப்புகளின் வழியே மழைநீர் பாய்ந்து செல்லாதவாறு பாதுகாப்பான வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தவும், கூரையிலிருந்து விழும் நீரை முறையாக அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் தென்பட்டால் உடனடியாக கிராம அலுவலருக்கும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அவசரநிலை ஏற்பட்டால், முடிந்தவரை விரைவாகப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுவதும், சுற்றியுள்ள மக்களுக்குத் தகவல் தெரிவிப்பதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் அளிப்பதும் மிகவும் முக்கியம் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.