ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 04.00 மணி முதல் நாளை புதன்கிழமை (24) மாலை 04.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
பதுளை மாவட்டம் - லுணுகலை, மீகஹகிவுல, சொரனாதொட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள்

கண்டி மாவட்டம் - தொலுவ, மனிப்பே, உடுதும்பர , மெததும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள்
குருணாகல் மாவட்டம் - ரிதிகம ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதி
மாத்தளை மாவட்டம் - உக்குவெல, அம்பன்கங்க கோரளை ,யட்டவத்த, ரத்தொட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள்
நுவரெலியா மாவட்டம் - வலப்பனை, நில்தண்டாஹின்ன, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam