12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளின் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை இன்று(23) பிற்பகல் 2:30 மணி முதல் நாளை (24)பிற்பகல் 2:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபாய எச்சரிக்கை
அதன்படி, பதுளை, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்ந்து நீடிப்பதால் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், நிலைமைகளைக் கண்காணித்து பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமையப் பாதுகாப்பாகச் செயற்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளனர்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri