நாட்டின் பல மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு நிலை மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை டிசம்பர் 07, 2025 அன்று மாலை 4:00 மணி முதல் டிசம்பர் 08, 2025 அன்று மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை
இதன்படி கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலி, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குறணை, குண்டசாலை, உடுநுவர, தொலுவ, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, ஹாரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட்ட கோரல, பஸ்பாகே கோரல, பன்வில, ஹதரலியத்த, யட்டிநுவர, பாததும்பர, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய மற்றும் உடபலாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கனை, புளத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, மாவனெல்லை மற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஆபத்தான இடங்களிலிருந்து வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 நிலை சிவப்பு எச்சரிக்கை
குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, நாரம்மல, பொல்கஹவெல, மல்லவபிட்டிய, அலவ்வ மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, மாத்தளை, அம்பன்கங்க கோரல, பல்லேபொல, லக்கல பல்லேகம, ரத்தோட்டை, நாவுல, உக்குவெல மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, அரநாயக்க, கலிகமுவ, யட்டியந்தோட்டை, ரம்புக்கன மற்றும் பிரதேச செயலகத்தின் ரிதிகம, அலவ்வ, மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலகம் மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்கள், வெளியேற்றப்படும் அபாயம் உள்ள பகுதிகள் (சிவப்பு நிலை - 3) என பெயரிடப்பட்டுள்ளது.

வெளியேற்றப்படும் அபாயம்
மேலும், பதுளை மாவட்டத்தின் வெலிமடை, ஹப்புத்தளை, லுணுகல, ஹல்துமுல்ல மற்றும் பசறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும், வரகாபொல
கேகாலை பிரதேச செயலகப் பிரிவுகளும், கேகாலை மாவட்டத்தில் உள்ள குமரநெகல பிரதேச செயலகப் பிரிவுகளும், மாவட்டத்தின் குமரநெகல பிரதேச செயலகப் பகுதிகளும் எச்சரிக்கை ஆபத்தில் உள்ள பகுதிகளாகும்.
தலவாக்கலை, அம்பகமுவ கோரளை, நோர்வூட், கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்தை மற்றும் கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவுகளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் பெயரிடப்பட்டுள்ளன.