நாட்டில் மண்சரிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மற்றும் மொனராகல் மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை முன்னறிவிப்பு ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் மொனராகல் மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இவ்வாறு மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 9.30 மணி முதல் நாளை இரவு 9.30 மணி வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri