ஹட்டன் - நுவரெலியா பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு..!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நேற்று(04.07.2026) ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவழிபாதையாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஹட்டன் பகுதிகளில் தொடர் மழைக் காரணமாக குடாகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், வீதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு அபாயம் அதிகரிப்பு
பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண் மேட்டினை அகற்றும் பணி இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியாளர் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் முன்னெரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு நுவரெலியா மாவட்டப் பேரிடர் மேலாண்மைப் பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


