குருநாகலில் மண்சரிவு! - இருவர் பலி (VIDEO)
குருநாகல் - ரிதிகம பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை, ரஸ்னகொட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் தந்தையொருவரும் அவரது மகனும் காணாமல் போயுள்ள நிலையில் தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, குருநாகலை - உடுபத்தாவ பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மாத்தளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளார். சீரற்ற வானிலையால் 5 பேர் காயமடைந்துள்ளார்கள்.
18 சொத்துக்களுக்கு முற்றாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு 960 சொத்துக்கள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. சீரற்ற வானிலையால் 23, 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
