சீனாவில் தோண்டி எடுக்கப்படும் சடலங்கள்! திடீர் மண்சரிவால் பதற்றம்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று(04.06.2023) கடும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவில், 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு பணிகள்
சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது காணாமல் போன 5 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்.



Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
