மாலி தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு: பலர் பலி
மாலி(Mali) நாட்டின் மேற்கு பிரதேசம் ஒன்றில், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் கொல்லப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்காவின்(Africa) முன்னணி தங்க உற்பத்தி நாடுகளில் மாலியும் ஒன்றாகும்.
அத்துடன், அங்கு சுரங்கத் தளங்களில் தொடர்ந்தும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன.
நிலச்சரிவு
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில், இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை சட்டவிரோதமான முறையில் வெட்டி எடுப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |