கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (27.05.2024) மாலை நான்கு மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நிலை 02 எச்சரிக்கை விடுக்கப்பட்டது:
• கொழும்பு - சீதாவக பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• களுத்துறை - இங்கிரிய, புலத்சிங்கள மற்றும் மத்துகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• கேகாலை – புலத்கொஹுபிட்டிய, தெரணியகல, ருவன்வெல்ல, கேகாலை, தெஹியோவிட்ட, வரகாபொல, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• நுவரெலியா - அம்பகமுவ மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
• இரத்தினபுரி - இம்புல்பே, பலாங்கொட, எலபாத, கலவான, கிரியெல்ல, எஹலியகொட, அயகம, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
பின்வரும் பகுதிகளுக்கு நிலை 01 எச்சரிக்கை
• கொழும்பு - பாதுக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• கம்பஹா – அத்தனகல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• களுத்துறை - தொடங்கொட, வலல்லாவிட்ட, அகலவத்தை, பாலிந்தநுவர மற்றும் ஹொரண மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
• கண்டி - உடபலத மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • கேகாலை - அரநாயக்க மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
• நுவரெலியா - கொத்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • இரத்தினபுரி - நிவிதிகல, பெல்மடுல்ல, ஓபநாயக்க மற்றும் கஹவத்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
