ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (29.12.2023) மதியம் 02.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான இடங்கள்
குறிப்பாக பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலி அல, பண்டாரவளை, சொரணதோட்டை, பசறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுக்கும், லக்கல மற்றும் பல்லேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் மெதகமை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் வலப்பனை பிரதேசத்திற்கும் விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் விரிசல், பள்ளங்கள், ஆழமான வேர்கள், சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள், சாய்ந்த தொலைபேசி கோபுரங்கள் போன்றவை இருந்தால் அந்த இடங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |