வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ள பெறுமதியான காணிகள்
கொழும்பிலும், வெளி மாவட்டங்களிலும் உள்ள உயர் வணிக பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் பலவற்றை முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய,சுமார் 50க்கும் மேற்பட்ட காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன், இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 6 பில்லியன் டொலர் ஆகும்.
கொழும்பு, ராஜகிரிய, நுகேகொட, பத்தரமுல்லை, வெலிக்கடை, நுவரெலியா, கண்டி மற்றும் ஜா-எல ஆகிய இடங்களில் பல காணிகள் இதற்காக முன்மொழியப்பட்டுள்ளன.
கொழும்பு விமானப்படைத் தலைமையகம் அமைந்துள்ள காணி, வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணி, புறக்கோட்டையில் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள காணி என்பனவும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
46 வேலைத்திட்டங்களுக்காக குறித்த காணிகள் மற்றும் கட்டிடங்கள் இவ்வாறு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதுடன், அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு, குறித்த காணிகள் மற்றும் கட்டிடங்களை 30,50 மற்றும் 99 வருடங்களுக்கு
வழங்க எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா எமது
தெரிவித்துள்ளார்.



