நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த நிலச்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நிலைமை நாடு முழுவதும் படிப்படியாக நிலைப்பெற்று வருகிறது.
இதன் தாக்கத்தால், நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை இன்று (19) மற்றும் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
