ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை.. நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபையின் மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸ்ஸை நீதவான் மோசடி விசாரணைப் பணியகத்திற்கு (FIB) உத்தரவிட்டுள்ளார்.
மோசடி பத்திரம்
தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சொத்தை, மோசடி பத்திரத்தைப் பயன்படுத்தி குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்னவால் சான்றளிக்கப்பட்ட 35 கூடுதல் ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதன்படி, இந்த வழக்கு ஓகஸ்ட் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




