கேப்பாப்புலவு மக்களின் காணி பிரச்சினை : கண்டுகொள்ளாத முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்
முல்லைத்தீவில் கேப்பாப்புலவு காணிப்பிரச்சினை குறித்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு அறிவித்தும் குறித்த மாவட்ட செயலாளர் கண்டு கொள்ளாத நிலைமை உள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாவட்ட செயலாளருக்கு அறிவித்த பின்னரே ஜனாதிபதியிடம் கொண்டு செல்ல வேண்டும்.
யுத்தம் நிறைவுக்கு வந்து எத்தனை செயலாளர்களும் இங்கு வந்தாலும் யாராலும் நமக்கு தீர்வு கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மே தினத்தன்று கேப்பாப்பிலவு மக்களாகிய நாம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைவரது ஆதரவை தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....