வவுனியாவில் இடம்பெற்ற காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு (Photos)
வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நெறிப்படுத்தலின் கீழ் 131 பேருக்கான காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (28.12.2023) வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
உறுதிப்பத்திரங்கள்
இதன் போது வவுனியா பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கணேசபுரம், மணிபுரம், ஆசிகுளம், சமயபுரம் உட்பட பல கிராம மக்கள் நீண்ட காலமாக தமது காணிகளுக்கு காணப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் இருந்து உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன், உதவி பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
