யாழ். பல்கலைக்கழக கற்கை பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை பார்வையிட்ட பிரதியமைச்சர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மீன்பிடிக்கற்கைப் பீடத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின பார்வையிட்டுள்ளார்.
நேற்று (02.09.2026) அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 39 ஏக்கர் பரப்பளவுடைய காணியே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
காணி தொடர்பான விளக்கங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற இக்களப்பார்வையின்போது, மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் காணி தொடர்பான விளக்கங்களை பிரதியமைச்சருக்கு வழங்கியுள்ளார்.

இதன்போது, காணியின் தற்போதைய நிலை, உத்தேச மீன்பிடிக் கற்கைப் பீடத்தை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக களத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்களப் பார்வையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலகநாதன் அவர்களும் மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.











நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan