நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு: பொறியியலாளர்கள் வெளியிட்ட தகவல்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒர் இயந்திரம் தொழிற்படுவதற்கு 50 நாட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்ட பின்பிறப்பாக்கி இயந்திரம் மீளவும் வழமை போன்று செயற்படுவதற்கு இவ்வாறு மேலும் 50 நாட்கள் தேவைப்படும் என பொறியியலாளர்கள் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளனர்.
தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சிக்கல்
தற்பொழுது இரண்டாம் இயந்திரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 560 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாள் ஒன்றுக்கு 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நீர் மின் உற்பத்தியை சிக்கனமாக செய்ய வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி நிலையமான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சீர் செய்வதற்கு பத்து நாட்கள் தேவை என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் பாரிய போராட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு |