ரிசாட்டை நாடாளுமன்றிற்கு அனுமதிக்கும் விவகாரம் - அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ரிசாட்டை நாடாளுமன்றிற்கு அழைத்துவருவது தொடர்பில் 24 மணித்தியாலங்களில் மூன்று கதைகள் சொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் கையொப்பம் கிடைக்கவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நேற்று கூறப்பட்டது, கோவிட் நோய்த் தொற்று காரணமாக என கூறினார்.
தற்பொழுது பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றி கூறுகின்றார் என லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நபர் என்ற வகையில் சபாநாயகர் அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
