‘‘மின்னிணைப்பு வல்லுநர்களின் பற்றாக்குறையால் வீடுகளின் மின்சாரக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல்’’
நாட்டில் சுமார் 45,000 பேர் மின்சாரம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனினும்,அதில் தொழில் வல்லுநர்கள் என்று அழைக்கப்படும் 95 வீதமானோர், அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்று இலங்கை பொது பயன்பாட்டு ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக , அவர்கள் அந்த தொழிலில் முன்னேற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தரப்படுத்தப்பட்ட மின்னிணைப்பு வல்லுநர்கள் இல்லாததால், வீடுகளின் மின்சாரக் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.
எனவே, இந்த அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வாக, அனைத்து மின்சார இணைப்பாளர்களுக்கும், தொழில் வல்லுநர் தரம் 3 பாடநெறியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அனைத்து மின்னிணைப்பாளர்களும், தகுதி பெற்றவுடன், அவர்கள் தொழில்முறை உரிமத்தை எளிதாகப் பெறலாம்.
இந்த மாதம் முதல் மாவட்ட அளவில் மின் தொழில்முறை உரிமத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.