பேருந்து சேவை இல்லாததால் சிரமப்படும் பாடசாலை மாணவர்கள்: செய்திகளின் தொகுப்பு
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பாடசாலை பேருந்து சேவை இன்றி மாணவர்கள் பாடசாலை செல்வதில் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகந்த, மதுரங்கலை, மலிந்த, சுசிரிகம ஆகிய கிராமங்களில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் இருநூறு பாடசாலை மாணவர்கள் உழவு இயந்திரத்தில் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இக்கிராமங்களின் பாடசாலை மாணவர்கள் செவனப்பிட்டிய, வெலிகந்த, மானம்பிட்டிய கல்லூரிகளுக்குச் செல்வதுடன், ஒவ்வொரு பிள்ளையும் தமது கிராமங்களிலிருந்து செவனப்பிட்டிக்கு செல்வதற்கு ஒவ்வொரு மாதமும் உழவு இயந்திர சாரதிக்கு மூவாயிரம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொலன்னறுவை டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றதாகவும், பேருந்து நிறுத்தப்பட்டதன் பின்னர் போக்குவரத்து வசதிகள் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி உள்ளிட்ட இன்னும் பல செய்திகளை சுமந்து வருகிறது இன்றைய காலைநேர பிரதான செய்திகள்...




