லேபர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான ஆய்வு முடிவினால் பதவி பறிபோகும் நிலையில் ரிஷி சுனக்
பிரித்தானியாவின் அடுத்த தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாக்கெடுப்பு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வந்த அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக வாக்கெடுப்பு நிறுவனமொன்று மக்கள் கருத்துக்களை பதிவு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
குறித்த வாக்கெடுப்பு நிறுவனத்தின் முடிவுகளின் படி, கன்சர்வேட்டிவ் கட்சியினை சேர்ந்த லிஸ் டிரஸ் பிரதமராக இருந்தபோது, அக்கட்சி அதள பாதாளத்தில் இருந்ததாகவும், லேபர் கட்சி அடுத்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய மக்களின் விரும்பம்
லிஸ் டிரஸை தொடர்ந்து ரிஷி சுனக் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளதுடன், தொடர்ந்து லேபர் கட்சியே அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் வாக்கெடுப்பு முடிவுகளின் படி, ரிஷி சுனக்கை விட, லேபர் கட்சியின் தலைவரான சர் கேர் ஸ்டாமரே பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றும் பிரித்தானிய மக்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் நிலவிவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான வாக்கெடுப்பு முடிவுகள் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது.