ஈரான் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட குவைத் பிரதமர்!
வளைகுடா நாடான குவைத் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தாக்குதலில் காயமடைந்து அல்-அதான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சந்திப்பின் போது பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சர் அகமது அப்துல்வஹாப் அல்-அவாதியும் உடனிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த பிரதமர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மருத்துவ உதவி
மேலும், காயமடைந்தவர்களின் நிலைமையை அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கடந்த சில நாட்களாக குவைத்தை இலக்காகக் கொண்டு ஈரான் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமரின் இந்த மருத்துவமனை வருகை அமைந்துள்ளது.
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri