வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்
குவைத்தில் இருந்து 28 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்த ஒரு குழுவாகும். மேலும் இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகள், பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறையுடன் இணைந்து பணியாற்றினர்.
இலங்கை வந்த குழுவினர்
இந்தக் குழுவினர் இன்று (27.10.2023)ஆம் திகதி காலை 06:30 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்கள் 24 பேரும் 04 ஆண்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணி எனவும் தெரியவந்துள்ளது.
நாடு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வசிப்பவர்களாவர்.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் இந்தக் குழுவினர் தமது கிராமங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்தியது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
