தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள குருந்தூர்மலை விவகாரம்! (VIDEO)
குருந்தூர்மலை, ஆதிசிவன் ஆலயத்தில், இன்று மேற்கொள்ளப்படவிருந்த பொங்கல் வழிபாடு, பௌத்த தேரர்கள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பௌத்த பிக்குகளும், பெரும்பாண்மை இனத்தவர்களும் பெருமளவில் குருந்தூர்மலை பகுதிக்கு சென்று பொங்கல் வழிபாட்டுக்குரிய செயற்பாடுகளைக் குழப்புகின்ற வகையில் செயற்பட்டிருந்தனர்.
இதனை தடுக்காது பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகவே பொலிஸாருடைய செயற்பாடுகள் காணப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் தேரரொருவர் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களையும் தேரர்களையும் அழைத்து வந்து குருந்தூர்மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதனை தடுக்க முற்பட்ட தமிழ் பெண்களை பொலிஸார் பலவந்தமாக அடித்து மோசமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் தற்போது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி தொடர்பிலான மேலதிக தகவல்களை இன்றைய செய்திவீச்சு நிகழ்ச்சியில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 மணி நேரம் முன்

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
