குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டப்பட்டுள்ள விகாரை! ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka Politician Supreme Court of Sri Lanka Sri Lankan political crisis Hinduism
By Vanniyan Mar 30, 2023 05:05 PM GMT
Report

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில் (02.03.2023) அன்று நீதிமன்றில் முறையீடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குருந்தூர்மலை விவகாரத்தில் அவ்வாறு நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் (30.03.2023) ஆம் திகதியன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய குறித்த வழக்கானது  இன்று (30.03.2023) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டப்பட்டுள்ள விகாரை! ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை | Kurunthur Buddist Temple Construction Issue

தொல்லியல் திணைக்களம்

அந்தவகையில் தொல்லியல் திணைக்களம் சார்பில், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க உள்ளிட்ட குழுவினரும், பொலிஸாரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது தமது சிரேஷ்ட சட்டத்தரணிகளும், சிரேஷ்ட அலுவலர்களும் நீதிமன்றிற்கு வரமுடியாத காரணத்தினால் தமது விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கு பிறிதொரு தவணையினை வழங்குமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களும் நீதிமன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டப்பட்டுள்ள விகாரை! ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை | Kurunthur Buddist Temple Construction Issue

நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறும் செயற்பாடு

இந் நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதானது, நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடு என குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்தோடு பொதுமக்கள் நீதிமன்றின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கக் கூடியதொரு செயற்பாடு எனவும் இதன்போது ஆலய நிர்வாகம் சார்பான சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டப்பட்டுள்ள விகாரை! ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை | Kurunthur Buddist Temple Construction Issue

இதேவேளை குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் அவர்கள் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு ஏற்கனவே இருந்த நிலையை விட புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா  அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான பிணிக்கும் தன்மையுடைய கட்டளை ஒன்றினை வழங்கவேண்டுமெனவும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் இருதரப்பு சமர்ப்பணங்களைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் மற்றும், பொலிஸார் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி வழக்குத் திகதியிடப்பட்டுள்ளது.

நீதிமன்றக் கட்டளைகளை அவமதிப்பு

மேலும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ். தனஞ்சயன் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை தொடர்பான AR/673/18 என்னும் வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்றால் வழங்கப்பட்ட இரண்டு கட்டளைகளை மீறி, நீதிமன்றக்கட்டளைகளை அவமதிப்பு செய்யும் விதமாக குருந்தூர்மலைப் பிரதேசத்தில் பௌத்த விகாரைக் கட்டுமானங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை இதற்கு முந்திய வழக்குத் தவணையில் நீதிமன்றிற்குச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டப்பட்டுள்ள விகாரை! ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை | Kurunthur Buddist Temple Construction Issue

இந்நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினரும், பொலிஸாரும் இது தொடர்பில் பதிலளிப்பதற்காக (30.03.2023) ஆம் திகதிக்கு இந்த வழக்குத் தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் தொல்பொருள் திணைக்களத்தைச் சார்ந்தவர்களும் பொலிஸாரும் மன்றிலே சமூகமாகியிருந்தனர்.

பௌத்த விகாரை  கட்டுமானப் பணிகள்

இதன்போது தமது சிரேஷ்ட சட்டத்தரணிகளும், சிரேஷ்ட அலுவலர்களும் நீதிமன்றிற்கு வரமுடியாத காரணத்தினால் பிறிதொரு தவணையினை வழங்குமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களும் நீதிமன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபடுகின்றது என்ற விடயத்தினை மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றோம்.

எனவே இச்செயற்பாடு நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடாக கருத முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

அத்தோடு பொதுமக்கள் நீதிமன்றின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கக் கூடியதொரு செயற்பாடாகவும் இதனைக் கருதமுடியுமெனவும் நாம் மன்றிலே எமது சமர்ப்பணங்களைச் செய்திருந்தோம்.

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டப்பட்டுள்ள விகாரை! ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை | Kurunthur Buddist Temple Construction Issue

மேலும் குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் அவர்கள் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு, ஏற்கனவே இருந்த நிலையை விட புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான பிணிக்கும் தன்மையுடைய கட்டளை ஒன்றினை வழங்கவேண்டுமென நாம் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பிலே கேட்டிருக்கின்றோம்.

அந்தவகையில் இந்த வழக்கானது தொல்பொருள் திணைக்களத்தினதும், சம்பந்தப்பட்ட தரப்பினரதும் பதிலுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US