நீதிமன்ற கூரையின் மீது ஏறி நபரொருவர் போராட்டம்
குருநாகல் நீதிமன்ற கட்டட வளாகத்தின் கூரையின் மீது ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மெல்சிறிபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள், தமக்கு அநீதி இழைப்பதாக தெரிவித்து குறித்த நபர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
எதிர்ப்பு போராட்டம்
சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு நீதிமன்றின் கூரையின் மீது ஏறி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மதுபானம் அருந்தி அதன் பின் நீதிமன்றின் கூரையின் மேல் அவர் ஏறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுடன், குருநாகல் மாநகரசபையின் தீயணைப்பு படை வீரர்களும் இணைந்து குறித்த நபரை கீழே இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
போலியான குற்றச்சாட்டு
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் தம்மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
நீதிமன்றின் கூரையின் மீது நபர் ஒருவர் ஏறி நிற்பதை பார்வையிட அந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குழுமி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
