இந்தியக் கடற்பரப்புக்குள் திசைமாறிச் சென்ற குருநகர் கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக கடலில் திசைமாறி இந்தியக் கடற்பரப்புக்குள் சென்ற நிலையில், தமிழகத்தின் பாம்பன் லைட்ஹவுஸ் கடற்கரையில் தமது மரப்படகுடன் கரை ஒதுங்கியுள்ளனர்.
குருநகரைச் சேர்ந்த ஜனோஜன் (27), டிவோசன் (36) ஆகிய இருவரும் நேற்று (9.11.2026) கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக படகு திசைமாறி இந்தியக் கடற்பரப்புக்குள் சென்றுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதையடுத்து, பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் அருகிலுள்ள லைட்ஹவுஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய இருவரையும் இந்திய மரைன் பொலிஸார் மீட்டு, படகுடன் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உரிய அனுமதியின்றி இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைந்தமை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.