திருமண வீட்டில் ஒன்றுக்கூடிய நண்பர்களால் குழப்பம்! நால்வர் வெட்டிப்படுகொலை
குருநாகலில் மதுபோதையில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 22, 25, 35, 41 வயதுடைய நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொலைக்கான காரணம்
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் 25 வயதுடைய இளைஞர் கடந்த 6 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்தார் எனவும், அவரின் வீட்டிலேயே நண்பர்கள் நேற்றிரவு ஒன்றுகூடி மதுபானம் அருந்தியுள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது முன்பகை காரணமாக இரு தரப்பினருக்கிடையில் வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த மோதல், இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் 8 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
