குருநாகல் கேபிள் கார் விபத்து : சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் மரணம்
குருநாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் சிகிச்சை
நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 7 பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டுப் பிக்குகளும் அடங்குவர். உயிரிழந்த உள்நாட்டுப் பிக்குகளின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதேவேளை, இந்த விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 5 பிக்குகள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
