திருத்த வேலைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட குமுதினி படகு (Photos)
நீண்டகாலமாக பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குமுதினிப் படகு திருத்த வேலைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நெடுந்தீவு - குறிகாட்டுவானுக்கான கடல் போக்கு வரத்துக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குமுதினி படகு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு மாவிலித் துறையிலும் அதன் பின்னர் குறிகாட்டுவானிலுமாக நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிந்தது.
கடந்த 1960 களில் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த பயணிகள் படகானது அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவியாக அமைந்தது.
குமுதினி படகு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில், வடதாரகை பலநோக்கு கூட்டுறவு சங்க படகு மற்றும் தனியார் படகுகள் என பல்வேறுபட்ட படகுகள் போக்கு வரத்துக்கு இருந்தாலும் குமுதினி படகே பொருத்தமான படகு என்ற கருத்தையே பலரும் முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறு பழுதடைந்து திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படாது இழுபறியில் கிடந்த குமுதினி படகு திருத்த வேலைகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
