மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் மற்றும் 200 வருட பூர்த்தி முத்திரை வெளியீட்டு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் 200 வருட பூர்த்தியை கொண்டாடும் முகமாகவும், 6வது மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டும், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவல் சபையினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தபால் திணைக்களமும் இணைந்து தேவஸ்தானத்தின பழமையை வெளிப்படுத்தும் முகமாக எதிர்வரும், 26.11.2025ஆம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு முத்திரை வெளியீட்டு நிகழ்வினை தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.
மஹா கும்பாபிஷேகத்தினைத் முன்னிட்டு 26ஆம், 27ஆம், 28ஆம் திகதிகளில் எண்ணெய்க்காப்பு நிகழ்வும், 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிமுதல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ. ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் மற்றும் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ. ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் அருளாசியுடன், பிரதிஸ்டா பிரதம சிவாச்சாரியார், தேவஸ்தான பிரதம குருக்கள் சிவாகம துரந்தரர், கிரியாபானு, விஸ்வகீர்த்தி சிவஸ்ரீ.சு.மணி கிருஸ்ணகுமார் குருக்களினால் மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளை இடம்பெறும், காணக்கிடைத்தற்கரிய இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து அம்பிகையின் அருட்கடாட்சம் பெறுமாறு பக்தியுடன் அழைக்கின்றனர்.


51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri