நாடாளுமன்றில் குமார ஜயக்கொடிக்கு பின்வரிசை ஆசனம்!
முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பின் பின்வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான ஆசன ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றின் தீர்மானம்
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் குமார ஜயக்கொடி கடந்த வெள்ளிக்கிழமை (17) எரிசக்தி அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

குமார ஜயக்கொடி தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றத்திற்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வலுசக்தி அமைச்சருடன் சேர்ந்து அந்த அமைச்சின் செயலாளரும் கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam