அநுர அரசில் தொடரும் குழப்பம்.. மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகும் சாத்தியம்!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் முக்கிய சம்பவமான சாய்ந்தமருந்து குண்டு வெடிப்பே இன்று சர்ச்கைக்குரிய விடயமாக இருக்கிறது.
இச்சம்பவம் நடைபெறும் போது கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியாக இருந்தவர் தான் இன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேக்கர.
குமார ஜயகொடியின் பதவி விலகலை தொடர்ந்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதோடு சாட்சியங்களும் பெறப்படுவதால் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேக்கரவும் பதவி விலக வேண்டும் என்ற கருத்து நிலவுவதாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆய்வாளருமான தரிந்து ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கிழக்கில் நடந்த சம்பவங்கள்
அது தொடர்பில் மேலும் விளக்கமாக கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் தான் வகிக்கும் பதவிக்கு பொறுப்புக் கூறல் என்ற வகையில் அவர் செயற்பட வேண்டும்.
நல்லாட்சி அரசு காலத்தில் நடந்த 52 நாள் ஆட்சி மாற்ற சதித்திட்டத்தின் பின்னரே அருண ஜயசேக்கர அதாவது மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்கும் போதே கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர்.
வவுணதீவு சம்பத்தின் போதும் அவர் கிழக்கில் தான் இருந்தார். அச் சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்கு மூலங்களில் கட்டளை தளபதியுடன் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது குண்டு வெடிப்பின் போது அந்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார்.அங்கு நடந்தவை என்ன என்று அருக்கு தெரியும்.
அவரின் ஆளுக்கைக்குள் தான் இன்றும் இராணுவம் இருக்கிறது.ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தாலும் பிரதி பாதுகாப்பு அமைச்சரே அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர்.

அன்று அவருக்கு கீழே பணியாற்றிய இராணுவத்தினர் சாய்ந்தமருது சம்பவம் தொடர்பில் இன்று எப்படி சாட்சியம் கூறுவார்கள்? இது சாத்தியப்படுமா.
இந்த அரசாங்கம் வந்த பின்னர் குற்றவியல் விசாரணைகள் திணைக்களம் நீண்ட வாக்குமூலம் ஒன்றையும் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளது.
நாங்கள் கூறவில்லை அருண ஜயசேக்கர ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர் என்று.ஆனால் நீதியான விசாரணைகளுக்கு அமைச்சு பதவிகள் சில தடைகளை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டிருந்தார்.