நாடாளுமன்றிற்கு வெளியே மக்கள் அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என யோசனை
நாடாளுமன்றிற்கு வெளியே மக்கள் அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமென முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள மக்களின் சக்தியை கட்சியொன்றோ அல்லது குழுவொன்றோ அபகரித்துக் கொள்ள இடமளிக்கப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றிற்கு வெளியே மக்கள் அரசாங்கமொன்றை உருவாக்க மக்கள் அணி திரள வேண்டும்.
மக்களுக்கு தங்களது பிரச்சினைகளை முன்வைக்கக்கூடிய மக்கள் சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த மக்களின் பிரச்சினைகள் தேசிய பேரவையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும்.
ஆட்சியில் இருக்கும் எந்தவொரு அரசாங்கத்தின் ஊடாகவும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
மீண்டும் சரவணனை பார்க்க போன மயில்.. அங்கு நடந்த சம்பவம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam