குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள குமார் தர்மசேன
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன (Kumar Dharmasena), தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் (Pintanna Plantation) தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு தமக்கு எதிராக சேறு பூசும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனமானது உள்ளூர் சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி செயல்படும் நிலையில் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு ஆதாரம் இருந்தால் அதனை முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டாளர்கள்
நான் இலங்கைக்காக கிரிக்கெட் (Sri Lanka Cricket) விளையாடினேன். இப்போது நாட்டுக்காக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். சிலர் என் மீது சேறு பூச முயற்சிப்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.
நிறுவனம் தொடர்பில் சந்தேகம் இருப்பவர்கள் அந்த இடத்திற்குச் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
