ஜனாதிபதியின் திட்டத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அரசாங்கத்தின் 'சுத்தமான இலங்கை' முயற்சிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்
இது தேசிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய படியாகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
குமார் சங்கக்கார
நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசிய மஹேல ஜெயவர்தன, இந்த முயற்சியில் பொதுமக்கள் பங்கேற்பு அதன் வெற்றிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்
குடிமக்களாக, இந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது ஒரு பெரிய பொறுப்பு என்றும் மேலும் செய்ய வேண்டிய செயற்பாடுகள் நிறைய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சமூக விழுமியங்களில் மாற்றத்தை வளர்க்கும் அதே வேளையில் அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சியாக இந்த திட்டம் இருப்பதாக குமார் சங்கக்கார கூறியுள்ளார்.
எளிமையான சொற்களில் விளக்கப்பட்டாலும், இந்த திட்டம் அதிக அர்த்தத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், அனைவரும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறும்போது உண்மையான மாற்றம் ஏற்படும். மாறாக அரசாங்கத்தால் இதை தனியாகச் செய்ய முடியாது என்று குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
